சினிமா செய்திகள்

ஹர ஹர மஹாதேவ்

ஹர ஹர மஹாதேவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Update: 2022-10-05 15:15 GMT
  • இயக்குனர் அபிஜித் தேஷ்பாண்டே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஹர ஹர மஹாதேவ்.
  • இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் அபிஜித் தேஷ்பாண்டே எழுதி இயக்கியுள்ள படம் 'ஹர ஹர மஹாதேவ்'. இந்த படத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜனாக சுபோத் பாவேயும், பாஜி பிரபு தேஷ்பாண்டேவாக ஷரத் கேல்கரும் நடித்துள்ளனர். ஜி ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் 'வா ரே வா ஷிவா' பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 'ஹர ஹர மஹாதேவ்' படத்தின் தலைப்புப் பாடலுக்கு ஷங்கர் மகாதேவன் குரல் கொடுத்துள்ளார்.


ஹர ஹர மஹாதேவ் போஸ்டர்

300 வீரர்கள் இணைந்து 12000 பேர்கள் கொண்ட எதிரி ராணுவத்தை எதிர்த்துப் போராடி (பாஜி பிரபு தலைமையில்) வெற்றி பெற்ற, நம் வரலாற்றில் நடந்த ஒரு உண்மையான போரை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் இந்தியா எங்கும் அக்டோபர் 25 -ஆம் தேதி ஜி ஸ்டூடியோஸ் நிறுவனத்தால் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News