சினிமா செய்திகள்

கவுரிகான் - ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான் மனைவி கவுரிகான் மீது மோசடி புகார்

Published On 2023-03-02 13:00 IST   |   Update On 2023-03-02 13:00:00 IST
  • அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி விற்பனை செய்யும் நிறுவனத்தின் விளம்பரத்தூதுவராக கவுரிகான் இருக்கிறார்.
  • கவுரிகான் மீது லக்னோவில் வசிக்கும் ஜஸ்வந்த் ஷா என்பவர் புகார் அளித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் நடித்த 'பதான்' திரைப்படம் ஜனவரி மாதம் வெளியானது. இது உலகம் முழுவதும் இருக்கும் திரையரங்கில் அதிக நாட்கள் ஓடி 1000 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலைச் செய்து வருகிறது. பதான் படத்தை வெளியிடக்கூடாது என்று ஷாருக்கானுக்கு எதிராக அரசியல் கட்சிகளும், மதம் சார்ந்த சில அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தின. ஷாருக்கானின் உருவ பொம்மையை எரித்தனர். ஆனால் 'பதான்' படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில் அவரது மனைவி கவுரிகான் மீது சொத்து அபகரிப்பு, நம்பிக்கை மோசடி போன்ற பிரிவுகளின் கீழ் லக்னோவில் வசிக்கும் ஜஸ்வந்த் ஷா என்பவர் புகார் அளித்திருக்கிறார். இதன் அடிப்படையில் லக்னோ போலீசார் கவுரிகான் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.

லக்னோவில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி விற்பனை செய்யும் நிறுவனத்தின் விளம்பரத்தூதுவராக கவுரிகான் இருக்கிறார். அந்த நிறுவனத்தில் வீடு வாங்க ஜஸ்வந்த் ஷா 86 லட்சம் ரூபாய் கட்டியிருந்ததாகவும் குறித்த நாளில் வீட்டை ஒப்படைக்கவில்லையென்றும் இதனால் நிறுவனர்கள் மீதும் விளம்பர தூதுவராக இருக்கும் கவுரிகான் மீதும் புகார் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.

Tags:    

Similar News