சினிமா செய்திகள்

ரன்வீர் சிங் -தீபிகா படுகோனே

ரன்வீர் கையை பிடிக்க மறுத்த தீபிகா.. வைரலாகும் வீடியோ

Update: 2023-03-25 09:02 GMT
  • பாலிவுட்டில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் தீபிகா படுகோனே -ரன்வீர் சிங்.
  • இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் தீபிகா படுகோனே -ரன்வீர் சிங். இவர்கள் இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து வந்ததையடுத்து கடந்த 2018 -ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் தீபிகா படுகோனே -ரன்வீர் சிங் தம்பதியிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று நெருக்கமானவர்கள் மறுத்தனர்.


ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே

இதையடுத்து இருவரும் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரன்வீர் சிங்கும் தீபிகாவும் கலந்துகொண்டனர். அதில், இருவரும் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது தீபிகாவின் கையை பிடிக்க முயன்றார் ரன்வீர் சிங். ஆனால் தீபிகா, ரன்வீரின் கையை பிடிக்க மறுத்து விட்டார். அதுமட்டுமல்லாமல் அவரின் முகத்தையும் பார்க்காமல் நடந்து சென்றுவிட்டார்.


ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே

இதனால் கோபமான ரன்வீர் சிங் முன்னால் வேகமாக நடந்து சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் இருவருக்கும் இடையே எதாவது பிரச்சினையா..? இருவரும் விவாகரத்து செய்யவுள்ளார்களா..? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News