சினிமா செய்திகள்

ஒரு நல்ல திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும்- டி.இமான்

Published On 2023-07-14 12:30 GMT   |   Update On 2023-07-14 12:30 GMT
  • இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடித்த திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்'.
  • இப்படம் ஜூன் 26-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த மே 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். மேலும் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


இப்படம் ஜூன் 26-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில், 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் நிறைவுபெற்றதையடுத்து இசையமைப்பாளர் டி.இமான் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "50 நாட்களாக தொடர்ந்து சமூக ஊடகங்களில் "கழுவேத்தி மூர்க்கனை" பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். தலைவர்களும் திரை ஆளுமைகளும் முற்போக்காளர்களும் பல மேடைகளில் படத்தினை பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படம் சார்ந்த கூட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. பத்துக்கும் மேலான காட்சிகள் தனியாக சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.


கழுவேத்தி மூர்க்கன் போஸ்டர்

ஒரு நல்ல திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும், ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும், படம் பேசும் தளத்திலான சூழல்கள் உருவாகும் போது படம் மீண்டும் திரும்பிப் பார்க்கப்பட வேண்டும். அதுவே வெற்றி. 50 நாட்களாக கழுவேத்தி மூர்க்கன் அவ்வேலையை செய்தபடி பயணித்துக் கொண்டே இருக்கிறான், நம்ம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும், அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும்.. கழுவேத்திமூர்க்கன். தோள் கொடுத்தவர்களுக்கு கை குலுக்கி நன்றிகளும் பூங்கொத்துக்களும்.. தொடர்கிறது பயணம்.." என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.




Tags:    

Similar News