சினிமா செய்திகள்

காந்தாரா

null

காந்தாரா படத்தில் இடம்பெறும் பாடல் திருடப்பட்டதா? கேரள இசைக்குழுவினர் பரபரப்பு புகார்

Published On 2022-10-27 11:45 IST   |   Update On 2022-10-27 15:45:00 IST
  • காந்தாரா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
  • இந்த படம் குறித்து நடிகர் ரஜினி சமூக வலைதளத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா என்ற கன்னட திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டும் வரவேற்பை பெற்றுள்ளது. ரூ.17 கோடி செலவில் தயாரான இந்த படம் இந்தியா முழுவதும் இதுவரை ரூ.170 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. 

 

காந்தாரா

கே.ஜி.எப் படத்துக்கு பிறகு இந்திய அளவில் அதிகம் பேசப்படும் கன்னட படமாக காந்தாரா மாறி உள்ளது. இப்படத்தை ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர். சில தின்ங்களுக்கு முன்பு இந்த படம் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார் மீது இந்து அமைப்பினர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். 

 

காந்தாரா

 

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் 'வராஹ ரூபம்' பாடல் தங்களின் 'நவரசம்' ஆல்பமில் இருந்து திருடப்பட்டுள்ளதாக தைக்குடம் இசைக்குழுவினரின் சமூக வலைதள பக்கத்தில் குற்றம் சாட்டினர். மேலும் இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது. 

Tags:    

Similar News