சினிமா செய்திகள்

சிரஞ்சீவி- ராம்சரண்

11 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த குழந்தை..பேத்தியின் பெயரை அறிவித்த சிரஞ்சீவி

Published On 2023-06-30 12:30 GMT   |   Update On 2023-06-30 12:30 GMT
  • ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.
  • திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பின் இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடினர்.

தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். ராம் சரண் கடந்த 2012-ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 11 ஆண்டுகள் கடந்ததையடுத்து ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதை அறிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவர்களை வாழ்த்து மழையில் நனைத்தனர்.


இந்நிலையில், ராம் சரண்-உபாசனா தம்பதியின் குழந்தைக்கு இன்று பெயர் சூட்டு விழா நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்றனர். அதன்படி, குழந்தைக்கு 'க்ளின் காரா கொனிடேலா' என பெயர் வைத்துள்ளனர்.


இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நடிகர் சிரஞ்சீவி இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



Tags:    

Similar News