சினிமா செய்திகள்

பிபாசா பாசு - கரண் சிங் குரோவர்

null

நடிகை பிபாசா பாசுவுக்கு பெண் குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்துக்கள்

Published On 2022-11-13 09:59 IST   |   Update On 2022-11-13 10:00:00 IST
  • பிரபல நடிகை பிபாசா பாசு, கரண் சிங் குரோவர் தம்பதி காதலித்து கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
  • இந்த தம்பதிக்கு பெண்குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

பிரபல இந்தி நடிகை பிபாசா பாசு. இவருக்கு 43 வயது ஆகிறது. தமிழில் விஜய்யுடன் சச்சின் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். முன்னணி கதாநாயகர்கள் படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமும் ஆடி இருக்கிறார்.

 

பிபாசா பாசு - கரண் சிங் குரோவர்

'அலோன்' திரைப்படத்தில் நடிக்குபோது பிபாசா பாசு, கரண் சிங் குரோவருக்கு இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2016-ம் ஆண்டு முறைப்படி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் 'டேஞ்சரஸ்' என்ற வெப் தொடரில் தம்பதிகள் இருவரும் இணைந்து நடித்தனர். இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் பிபாசா பாசு கர்ப்பமாக இருப்பதை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்தார். அதன்பிறகு அது தொடர்பான சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.

 

பிபாசா பாசு - கரண் சிங் குரோவர்

இந்த நிலையில், நடிகை பிபாசா பாசுவிற்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. நடிகர் கரண் சிங் குரோவர் - நடிகை பிபாசா பாசு தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தம்பதிக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News