சினிமா செய்திகள்

நயன்தாரா

null

நடிகை நயன்தாரா திடீரென மருத்துவமனையில் அனுமதி

Published On 2022-08-10 14:14 GMT   |   Update On 2022-08-12 10:35 GMT
  • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா.
  • இவர் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததை அடுத்து இவர்களது திருமணம் ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.


நயன்தாரா - விக்னேஷ் சிவன்

இந்நிலையில் நயன்தாரா சாப்பிட்ட உணவின் ஒவ்வாமை காரணமாக திடீரென்று வாந்தி எடுத்ததாகவும் இதனால் அவரது கணவர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மருத்துவமனையில் ஒரு சில மணி நேரங்கள் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி இதுவரை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனால் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News