சினிமா செய்திகள்

அப்பாஸ்

நடிகர் அப்பாஸுக்கு அறுவை சிகிச்சை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Published On 2022-11-21 11:14 GMT   |   Update On 2022-11-21 11:14 GMT
  • 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ்.
  • இவர் வெளிநாட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்த அப்பாஸ் 1996-ம் ஆண்டு வெளியான 'காதல் தேசம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து,'விஐபி', 'பூச்சூடவா', 'படையப்பா', 'திருட்டுப் பயலே' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.


அப்பாஸ்

இந்நிலையில், நடிகர் அப்பாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவரது வலது காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவேன் என்றும் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News