சினிமா செய்திகள்

சூர்யாவின் Highest Opening Retro - முதல் நாள் வசூல் விவரம்

Published On 2025-05-02 13:36 IST   |   Update On 2025-05-02 13:36:00 IST
  • கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
  • பெரும்பாலான திரையரங்கிள் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக நிரம்பியுள்ளது.

நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வரும் இரண்டு நாட்களுக்கு தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான திரையரங்கிள் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக நிரம்பியுள்ளது.

 

புக் மை ஷோ செயலியில் கடந்த 24 மணி நேரத்தில் 2.5 லட்சத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் தமிழ் நாடு வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் டிக்கெட் விலையில் உயர்வு இல்லாமலே 17.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதுவே சூர்யா படங்களில் கிடைத்த அதிக ஓப்பனிங் வசூலாகு. இன்னும் வரும் நாட்களில் இன்னும் அதிகம் வசூலாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News