சினிமா செய்திகள்

சூரி நடித்த மாமன் படத்தின் வசூல் மற்றும் ஓடிடி அப்டேட்

Published On 2025-05-30 11:53 IST   |   Update On 2025-05-30 11:53:00 IST
  • நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'மாமன்'.
  • இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'மாமன்'. கடந்த மே 16 ஆம் தேதி இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது. படம் வெளியாகி இதுவரை 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் வெளியாகி 15 நாட்களில் 30 கோடி வசூலித்து வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது.

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் மற்றும் மாமன் திரைப்படம் ஒரே நாளில் வெளியானது. வசூலில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை மாமன் திரைப்படம் தாண்டியுள்ளது. படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் வாங்கியுள்ளது. திரைப்படம் திரையரங்குகளில் 30 நாட்கள் ஓடிய பின்பு ஓடிடியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜூன் இரண்டாவது வாரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News