சினிமா செய்திகள்
null

சூரி நடிப்பில் உருவாகும் மாமன் படத்தின் BTS வீடியோ வெளியீடு

Published On 2025-04-22 20:50 IST   |   Update On 2025-04-22 20:57:00 IST
  • பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடித்து வருகிறார்.
  • இப்படம் மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

கருடன் படத்திற்குப் பிறகு நடிகர் சூரி, 'விலங்கு' எனும் இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.

ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக 'மாமன்' உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் BTS வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து சூரி மண்டாடி படத்தில் நடித்து வருகிறார்.

Tags:    

Similar News