சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு: வீடியோ வெளியிட்ட படக்குழு..!

Published On 2025-10-20 19:27 IST   |   Update On 2025-10-20 19:27:00 IST
  • டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் (25-வது படம்) நடிக்கும் படம் பராசக்தி. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.

இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது என படக்குழு தெரிவித்த நிலையில், அதற்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் இப்படம் திரைக்கு வருகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது.

Tags:    

Similar News