சினிமா செய்திகள்
null

கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம்- அமெரிக்காவில் மேல்சிகிச்சை

Published On 2025-07-19 14:31 IST   |   Update On 2025-07-19 14:35:00 IST
  • பாலிவுட் பாட்ஷா', 'கிங் கான்' என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான்.
  • ஷாருக்கான் அடுத்ததாக 'தி கிங்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பாலிவுட் பாட்ஷா', 'கிங் கான்' என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

டைரக்டர் ஆகவேண்டும் என்பது மூத்த மகனின் கனவு அதற்காக தயாராகி வருகிறார். கடைசி மகன் பள்ளியில் படித்து வருகிறார். ஷாருக்கானின் மகள் சுகானா கான். அமெரிக்கா 'ஆக்டிங்' ஸ்கூலில் படித்துள்ளார்.

பதான் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார். இந்த படம் 1000 கோடி வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் ஷாருக்கான் அடுத்ததாக 'தி கிங்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சுஜோய் கோஷால் இயக்குகிறார். இப்படத்தை ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' தயாரிக்கிறது.

இந்த படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் தந்தை மகள் ஆகிய இருவரும் படம் முழுவதும் நடிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு பணிகள் மும்பையில் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில். அதிரடி ஆக்ஷன் காட்சி இன்று படமாக்கப்பட்டது. அதில் ஷாருக் கான் ஈடுபட்டார் அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன் சிகிச்சைக்காக அவரை அமெரிக்கா அழைத்து சென்றுள்ளனர்.

அவருக்கு தசை பிரண்டுள்ளது என கூறப்படுகிறது அதனால் 1 மாத காலம் அவர் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர் ஆலோசனை அளித்துள்ளனர். இதனால் படப்பிடிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News