'ஜெயிலர் 2' படத்தில் இவரா? நகைச்சுவைக்கு பஞ்சமில்லை...
- இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி ‘ஜெயிலர்2’ வெளியாகும் என ரஜினி தெரிவித்தார்.
- ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் ‘ஜெயிலர்2’ படத்தில் நடித்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது.
'கூலி' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகிறார். 'ஜெயிலர்' முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளை முடித்த அவர், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி 'ஜெயிலர்2' வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் 'ஜெயிலர்2' படத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், 'ஜெயிலர்2' படத்தின் நடிகர்கள் தேர்வு நாளுக்கு நாள் பெரிதாகி எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
அதன்படி, இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன், பாலய்யா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, சந்தானம், ஃபஹத் பாசில், தமன்னா, வித்யா பாலன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது.
'ஜெயிலர்2' படத்தில் சந்தானம் நடிப்பதால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மேலும் 'ஜெயிலர்2' படப்பிடிப்பிற்காக சந்தானம் அடுத்த மாதம் முதல் பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.