சினிமா செய்திகள்

சினிமாவில் எனக்கு இனி ஓய்வு இல்லை- நடிகை சமந்தா

Published On 2025-02-27 08:25 IST   |   Update On 2025-02-27 08:25:00 IST
  • சினிமாவை நான் மிகவும் நேசிக்கிறேன்.
  • ஏற்கனவே நிறைய இடைவெளி எடுத்து விட்டேன்.

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சமந்தா 'பேமிலிமேன் 2' வெப் தொடர் மூலம் இந்தியிலும் பிரபலமாகி இருக்கிறார்.

ஏற்கனவே விவாகரத்து, தசை அழற்சி நோய் பாதிப்பு, தந்தை மரணம் என்று பல கஷ்டங்களை எதிர்கொண்டதால் சினிமாவை விட்டு கொஞ்சம் விலகி இருந்து விட்டு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

'சிட்டாடல் ஹனி பன்னி' வெப் தொடரில் நடித்துள்ளார். இன்னொரு வெப் தொடரில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த நிலையில் சமந்தா கூறும்போது, "இனிமேல் நடிப்பில் இடைவெளி எடுக்க மாட்டேன். நடிப்புதான் எனது முதல் காதல். சினிமாவை நான் மிகவும் நேசிக்கிறேன். இனி நடிப்புக்கு ஓய்வு கொடுக்க மாட்டேன்.

ஏற்கனவே நிறைய இடைவெளி எடுத்து விட்டேன். மீண்டும் உங்களது சமந்தா தொடர் படங்களுடன் உங்கள் முன் நிற்பார்.

தற்போது 'ரகத் பிரம்மாண்டு' வெப் தொடரில் நடித்து வருகிறேன். அதன் பிறகு மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறேன். அதன் படப்பிடிப்பு இரண்டு மாதங்களில் தொடங்க உள்ளது என்றார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News