சினிமா செய்திகள்

சினிமாவில் பொன்விழா: கோவா திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு விருது

Published On 2025-11-08 07:41 IST   |   Update On 2025-11-08 07:41:00 IST
  • திரைப்படம் சார்ந்த ஆவணப்படங்கள், ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
  • சிறப்பு ஆய்வரங்குகள், பயிற்சி பட்டறைகளும் நடைபெறவுள்ளன.

கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்று. இது உலகளாவிய திரைப்படங்களையும், உள்ளூர் திறமைகளையும் வெளிப்படுத்துகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா, கோவாவில் வருகிற 20-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.

மேலும் திரைப்படம் சார்ந்த ஆவணப்படங்கள், ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. சிறப்பு ஆய்வரங்குகள், பயிற்சி பட்டறைகளும் நடைபெறவுள்ளன.

இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளதைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அத்துடன் சிறந்த நடிப்புக்கான விருதுகளும் பிரபலங்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த விழாவை இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மற்றும் கோவா மாநில அரசு ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது.

Tags:    

Similar News