போலீசாக மிரட்டும் சிவாஜி பேரன்: லெனின் பாண்டியன் வீடியோ வெளியீடு
விஜய் சேதுபதி, நித்யாமேனன் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. இப்படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது.
மிகப்பெரிய வெற்றி படத்திற்குப் பிறகு சிவாஜி கணேசன் பேரன் தர்சன் கணேசனை வைத்து புதுப்படம் தயாரிப்பதாக அறிவித்திருந்தது. இப்படத்தில் கங்கை அமரன், ரோஜா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தை புதுமுக இயக்குனர் பாலசந்திரன் இயக்குகினார்.
இப்படத்திற்கு லெனின் பாண்டியன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தர்சனின் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் போலீசாக நடிக்கிறார்.
தர்சன் கணேசன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமாரின் இரண்டாவது மகனாவார். ராம் குமாரின் மூத்த மகனான துஷ்யந்த் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருக்கிரார். பிரபுவின் மகனான விக்ரம் பிரபு ஏற்கனவே கதாநாயகனாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் தர்சன் கணேசனும் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடிகர் கார்த்தி இந்த வீடியோவை வெளியிட்டு தர்சன் கணேசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.