சினிமா செய்திகள்

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆகும் 'புதுப்பேட்டை' திரைப்படம்

Published On 2025-07-13 07:34 IST   |   Update On 2025-07-13 07:34:00 IST
  • 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை திரைப்படம் வெளியானது.
  • யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின.

நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு 'புதுப்பேட்டை' திரைப்படம் ஜூலை 26ல் புதுப்பொலிவுடன் 4K தரத்தில் ரீ-ரிலீஸ் ஆகிறது

2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை திரைப்படம் வெளியானது. இப்படத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின.

புதுப்பேட்டை திரைப்படம் வெளியான சமயத்தில் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் இத்திரைப்படம் பின்னாளில் மக்களிடம் பெரும் கவனத்தை பெற்று கல்ட் கிளாசிக் கேங்ஸ்டர் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News