சினிமா செய்திகள்

ஹீரோவாக களமிறங்கும் பூவையார் - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published On 2025-05-31 14:01 IST   |   Update On 2025-05-31 14:01:00 IST
  • சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்தவர் பூவையார்.
  • இப்படத்தை அன்னை வேளாங்கன்னி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க டி ஜெயவேல் இயக்குகிறார்.

சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்தவர் பூவையார். விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். இந்நிலையில் தற்பொழுது பூவையார் கதாநாயகனாக திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை அன்னை வேளாங்கன்னி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க டி ஜெயவேல் இயக்குகிறார். படத்திற்கு ராம் அப்துல்லா ஆண்டனி என தலைப்பு வைத்துள்ளனர். திரைப்படம் பள்ளி சிறுவர்கள் இடையே நடக்கும் கதைக்களமாக உருவாக இருக்கிறது.

மேலும் பூவையாருடன் அஜய் அர்னால்ட் மற்றும் அர்ஜுன் என இரண்டு சிறுவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, கிச்சா ரவி மற்றும் அர்னவ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News