சினிமா செய்திகள்

ஃபினீக்ஸ் படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியீடு

Published On 2025-06-27 13:02 IST   |   Update On 2025-06-27 13:02:00 IST
  • விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
  • வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார். பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகுகிறார்

படத்தில் சூர்யா பாக்சராக நடிக்க மேலும் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் ஜுலை 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை நடைப்பெறுகிறது. படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லரை இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் கார்த்தி அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிடவுள்ளனர்.

Tags:    

Similar News