575 படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய நிகில் முருகனுக்கு கலைமாமணி விருது
- 90 திரைக்கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கிப் பாராட்டினார்.
- திரையுலக பயணத்தை தொடங்கிய நிகில் முருகன் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப்பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, அனிருத் உள்பட 90 திரைக்கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கிப் பாராட்டினார்.
கலைமாமணி விருது பெற்றவர்களில் 30 ஆண்டுகளாக 575-க்கும் மேற்பட்ட படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக தொடர்ந்து பணியாற்றி வரும் நிகில் முருகனும் ஒருவர். 1988-ம் ஆண்டு தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நிகில் முருகன் பல விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், கே. பாலசந்தர், மணிரத்னம், ஷங்கர், பாலா, கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான் போன்ற திரைத்துறை உச்ச பிரபலங்களின் நிகழ்ச்சிகளையும் திறம்பட செய்துள்ளார்.