சினிமா செய்திகள்

வசூல் குவிக்கும் 'மாஸ்க்' - எவ்வளவு தெரியுமா?

Published On 2025-11-27 08:05 IST   |   Update On 2025-11-27 08:05:00 IST
  • தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார்.
  • ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் 'மாஸ்க்'. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தில் தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் தொடர்பான டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து 'மாஸ்க்' படம் கடந்த 21-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இந்த நிலையில், 'மாஸ்க்' படம் பாக்ஸ் ஆபிஸில் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 'மாஸ்க்' படம் ரூ.5 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Tags:    

Similar News