null
'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- சென்னை ஐகோர்ட்டில் கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
- தணிக்கை சான்று வழங்கும் வரை இதுபோல வழக்கு தொடர முடியாது என்று தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்துள்ளது. அந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அந்த திரைப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது, பாதுகாப்பு படை தொடர்பான சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால், அதுகுறித்து ஆய்வு செய்ய பாதுகாப்பு துறை நிபுணர்களை நியமிக்க வேண்டியதுள்ளது. தணிக்கை சான்று வழங்கும் வரை இதுபோல வழக்கு தொடர முடியாது என்று தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார். இதனிடையே இந்த வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி பிறப்பிக்க உள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 'ஜன நாயகன்' படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.