கொஞ்ச நாள் பொறு தலைவா- திரைவிமர்சனம்
திருப்பரங்குன்றம் பகுதியில் வாழ்ந்து வரும் நாயகன் நிஷாந்த், தனது மாமா லொள்ளு சபா மாறன் நண்பர்கள் பால சரவணன், கும்கி அஸ்வின் ஆகியோருடன் திருச்சிக்கு வேலைக்கு செல்கிறார். அங்கு நாயகி காயத்ரியை பார்த்தவுடன் காதலில் விழுகிறார். பின்னர் அவருடன் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி சந்திக்கிறார்.
ஒரு கட்டத்தில் நிஷாந்த் காதலை சொல்லும் போது, காயத்ரி மறுக்கிறார். காதல் தோல்வியை தாங்க முடியாத நிஷாந்த் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். அப்போது ஆமானுஷ்ய சக்தி கொண்ட மொட்டை ராஜேந்திரன், நிஷாந்த் தற்கொலையை தடுக்கிறார்.
இறுதியில் நிஷாந்த், காயத்ரியுடன் இணைந்தாரா? மொட்டை ராஜேந்திரன் யார்? நிஷாந்த் தற்கொலையை மொட்டை ராஜேந்திரன் தடுக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் நிஷாந்த் ரூசோ காதல், ஆக்ஷன், காமெடி என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் காயத்ரி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மொட்டை ராஜேத்திரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன், கும்கி அஸ்வின் ஆகியோர் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள். அர்ஷத் வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சி செய்து இருக்கிறார்.
இயக்கம்
காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் பாண்டியன். இதில் பேண்டஸி, காமெடி கலந்த திரைக்கதை அமைத்திருக்கிறார். முதல் பாதி காதல் இரண்டாம் பாதி பேண்டஸி என திரைக்கதையை நகர்த்திருக்கிறார். காமெடி காட்சிகள் பெரிதாக எடுபடவில்லை. முதல் பாதி திரைக்கதை வழக்கமான சினிமா தனம் போல் அமைந்திருப்பது படத்திற்கு பலவீனம்.
இசை
சமந்த் நாக் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
ஜோன்ஸ் வி ஆனந்த் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
ரேட்டிங்- 2/5