சினிமா செய்திகள்

நாளை 75-வது பிறந்தநாள்: ரசிகர்களை சந்திப்பாரா ரஜினி?

Published On 2025-12-11 14:06 IST   |   Update On 2025-12-11 14:06:00 IST
  • பிறந்தநாளில் வழக்கமாக ரஜினி சென்னையில் இருப்பதை தவிர்த்து வருகிறார்.
  • பிறந்தநாளில் ரஜினியை பார்ப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் வருகை தந்து ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

தமிழ் திரை உலகில் 50 ஆண்டுகளாக ஒரு சகாப்தமாக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த்.

எத்தனை நடிகர்கள் வந்தாலும் ஒட்டு மொத்த தமிழகத்திலும் ரஜினி என்ற பெயர் மந்திர சொல்லாக ஒலித்து வருகிறது. அவரது தனி ஸ்டைல்தான், ரஜினியின் தாரக மந்திரம். இந்த மந்திரம் தான் அவரை சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது.

இத்தனை ஆண்டு காலம் திரை உலகில் தனி சகாப்தத்தை உருவாக்கி வரும் ரஜினி நடிப்பில் படம் எப்போது வரும் என காத்திருக்கும் ரசிகர்கள், தமிழகம் மட்டுமின்றி சர்வதேச அளவில் காத்திருக்கின்றனர்.

அந்த அளவுக்கு சினிமாவில் ஒரு மாயாஜாலத்தை உருவாக்கி உள்ளார் ரஜினிகாந்த். இது நான் சேர்த்த கூட்டம் அல்ல. இது தானாக சேர்ந்த கூட்டம் என ரஜினியின் கம்பீர குரல் தமிழ் சினிமா ரசிகர்களை ஆட்டுவித்து வருகிறது.

இந்நிலையில் ரஜினி தனது 75-வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாட இருக்கின்றனர்.

பிறந்தநாளில் வழக்கமாக ரஜினி சென்னையில் இருப்பதை தவிர்த்து வருகிறார். பிறந்தநாளில் ரஜினியை பார்ப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் வருகை தந்து ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

நாளை 75-வது பிறந்த நாள் என்பதால் ரஜினி ரசிகர்களை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது. இது தொடர்பாக ரஜினி தரப்பில் விசாரித்த போது, 'ரஜினிகாந்த் பிறந்தநாளின் போது எப்போதும் சென்னையில் இருப்பதில்லை. அதுபோல் அவரது பிறந்தநாளான நாளையும் ரஜினி சென்னையில் இல்லை எனவும், ரசிகர்களை சந்திக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News