சினிமா செய்திகள்

'கல்கி 2898AD' 2 படப்பிடிப்புத் தளத்தில் அமிதாப் பச்சனை சந்தித்த கமல்

Published On 2026-02-24 13:56 IST   |   Update On 2026-02-24 13:56:00 IST
  • தற்போது 'கல்கி 2898 ஏடி' 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
  • இந்த பாகத்தில் கமல்ஹாசனின் யாஸ்கின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் உலகமெங்கும் ரூ.1100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார். மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக இப்படம் எடுக்கப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தற்போது 'கல்கி 2898 ஏடி' 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த பாகத்தில் கமல்ஹாசனின் யாஸ்கின் என்ற வில்லன் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'கல்கி 2898AD' 2 படப்பிடிப்புத் தளத்தில் அமிதாப் பச்சனை கமல்ஹாசன் சந்தித்தார். அமிதாப் பச்சன், கமல்ஹாசனுக்கு இடையேயான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. 'கல்கி 2898AD' 2 ஆம் பாகம் 2028 ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News