சினிமா செய்திகள்

64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான்- கமல்ஹாசன்

Published On 2023-08-12 16:31 IST   |   Update On 2023-08-12 16:31:00 IST
  • பல விருதுகளை குவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 64 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளது.
  • பலரும் தங்களது வாழ்த்துக்களை கமல்ஹாசனுக்கு தெரிவித்து வருகின்றனர்.

நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்ட நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.

1960-ஆம் ஆண்டு வெளியான 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது, பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது என பல விருதுகளை குவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 64 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளது. இதனை இவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாழ்த்தியவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி என கமல்ஹாசன் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக.

உங்கள்

நான் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News