சினிமா செய்திகள்

வசூலில் பட்டையை கிளப்பும் Jurassic World Rebirth! இந்தியாவில் மட்டும் இத்தனை கோடிகளா?

Published On 2025-07-19 11:06 IST   |   Update On 2025-07-19 11:06:00 IST
  • யுனிவர்சல் பிக்சர்ஸின் ' ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்' திரைப்படம் அண்மையில் உலகம் முழுவதும் வெளியானது.
  • பாஃப்டா வின்னர் கரேத் எட்வர்ட்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்

வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகிக்கும் யுனிவர்சல் பிக்சர்ஸின் ' ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்' திரைப்படம் அண்மையில் உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திரைப்படத்தை இந்தியாவில் குடும்பம் குடும்பமாக சென்று பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். திரைப்படம் இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

பாஃப்டா வின்னர் கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்ஷன் அட்வென்ச்சர் படத்தில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஆலிவர் விருது வென்ற ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி மற்றும் லூனா பிளேஸ் மற்றும் ரூபர்ட் ஃப்ரெண்ட் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கதை ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனுக்குப் பிறகு வருகிறது. அங்கு மீதமுள்ள டைனோசர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அங்கு தன் இனத்தைப் பெருக்கி இருக்கிறது. அந்தச் சூழலில் இருக்கிற மிகப் பிரம்மாண்டமான மூன்று டைனோசர்கள், மனித இனத்துக்கு அதிசயிக்கத்தக்க உயிர்காக்கும் நன்மைகளைக் கொண்டுவரப்போகும் ஒரு மருந்தின் திறவுகோலைக் கொண்டிருக்கின்றன.

இதில் நடிகர் ஜொனாதன் பெய்லி தொல்லுயிரியலாளர் டாக்டர் ஹென்றி லூமிஸாகவும் நடிகர் ஸ்கார்லெட் ஜோஹன்சன் திறமையான இரகசிய செயல்பாட்டு நிபுணர் ஜோரா பென்னட்டாகவும் நடித்துள்ளார்கள். அவர் உலகின் மூன்று மிகப் பெரிய டைனோசர்களிடமிருந்து மரபணுப் பொருளைப் பாதுகாப்பதற்கான ஒரு உயர் ரகசிய பணியில் திறமையான குழுவை வழிநடத்துகிறார்.

இது ஒரு குடும்பத்தை பாதிக்கிறது. அந்த குடும்பம் எதிர்பாராத விதமாக ஒரு தீவில் சிக்கித் தவிக்கிறார்கள். அங்கு அவர்கள் பல தசாப்தங்களாக உலகத்திலிருந்து மறைக்கப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். இதுதான் படத்தின் கதைக்களமாகும்.

Tags:    

Similar News