சினிமா செய்திகள்

'ஜனநாயகன்' குறித்து வெளியான புது அப்டேட்...

Published On 2025-04-05 08:46 IST   |   Update On 2025-04-05 08:46:00 IST
  • இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
  • இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகிறது.

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பு மே மாதம் 15-ந்தேதிக்குள் முடிவடைய உள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்னதாகவே விஜய் தொடர்பான காட்சிகள் எடுத்து முடிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விஜய் ஜுன் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

Similar News