சினிமா செய்திகள்

'ஜன நாயகன்' - மறு ஆய்வு என்ற தணிக்கை குழுவின் முடிவு தவறானது - உயர் நீதிமன்றம்

Published On 2026-01-09 10:56 IST   |   Update On 2026-01-09 10:56:00 IST
  • படத்தை பார்த்த உறுப்பினர்களில் ஒரு நபர் சான்றிதழ் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
  • சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழை வழங்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தணிக்கை சான்றிதழை உடனே வழங்க தணிக்கை வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதுதொடர்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில், படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் படத்திற்கு சான்றிதழ் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். அதே நேரம் படத்தை பார்த்த உறுப்பினர்களில் ஒரு நபர் சான்றிதழ் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

முன்கூட்டியே எட்டப்பட்ட உடன்பாடு: 22.12.2025 அன்று தணிக்கை குழு (CBFC) படக்குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில், குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்குவதாக ஒப்புக்கொண்டது.

விதிமீறல் வாதம்: தணிக்கை குழு பரிந்துரைத்த திருத்தங்களை படக்குழு மேற்கொண்ட பிறகு, மீண்டும் படத்தை மறு ஆய்வுக்கு (Re-examination) உட்படுத்துவதாகக் கூறுவது தணிக்கை குழுவின் தவறான நடைமுறை என நீதிபதி சுட்டிக்காட்டினார்.

யு/ஏ (U/A) சான்றிதழ் உறுதி: 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் வகையிலான 'U/A' சான்றிதழ் வழங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிலையில், ஜனவரி 6-ம் தேதி மீண்டும் மறுஆய்வு செய்ய எடுத்த முடிவு சட்டப்படி செல்லாது.

தணிக்கை வாரியத்தின் புகார் நிராகரிப்பு: 'ஜன நாயகன்' படத்திற்கு எதிராக தணிக்கை வாரியம் முன்வைத்த புகார்கள் நிலைக்கத்தக்கவை அல்ல என்று நீதிமன்றம் கருதியது.

இறுதி உத்தரவு: தணிக்கை குழு ஒப்புக்கொண்டபடி, 'ஜன நாயகன்' படத்திற்கு உடனடியாகத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News