null
சிவகார்த்திகேயனின் மதராஸி எப்படி இருக்கு? நெட்டிசன்களின் கருத்து என்ன?
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
திரைப்படம் எப்படி இருக்கு என்பதை ரசிகர்கள் அவர்களது கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் சிவகார்த்திகேயனின் நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர். ருக்மிணி - சிவகார்த்திகேயனின் காதல் காட்சிகள் ரசிக்கும்படி அமைந்துள்ளது.
ஆக்ஷன் காட்சிகளை ஏ.ஆர் முருகதாஸ் பிரம்மாதமாக கையாண்டுள்ளார். படத்தின் முதல் பாதி நல்ல காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளால் நிறைந்து பார்வையாளர்களின் மனதில் இடம் பிடிக்கிறது, இடைவேளை பகுதியில் வரும் காட்சி அட்டகாசமாக இருக்கிறது. மேலும் இரண்டாம் பாதி முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கதை மெதுவாக நகர்கிறது போன்ற கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மொத்தத்தில் மதராஸி சிவகார்த்திகேயனுக்கு ஒரு அபவ் ஆவரேஜ் திரைப்படமாகவும் ஏ.ஆர் முருகதாஸ்-க்கு ஒரு கம் பேக் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.