சினிமா செய்திகள்

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டார்..! நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பரபரப்பு புகார்

Published On 2025-09-08 19:06 IST   |   Update On 2025-09-08 19:06:00 IST
  • நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் ஆகி மரியா என்ற மனைவி உள்ளார்.
  • என்னை திருநங்கை என்ற காரணத்தை காட்டி திருமணம் செய்ய மறுக்கிறார்.

தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன். பெண் வேடம் போட்டு அவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கு என இடம் பிடித்தவர்.

இவருக்கு திருமணம் ஆகி மரியா என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில், நஞ்சின் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக திருநங்கை ஒருவர் அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில்," கடந்த 15 ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறேன். அதில் கடந்த 5 வருடங்களாக நானும், நாஞ்சில் விஜயனும் காதலித்து வந்தோம், தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறிவிட்டு பாலியல் ரீதியாகவும் பயன்படுத்திக் கொண்டார்.

திருமணம் ஆன பிறகும் என்னுடன் பழகிக்கொண்டு தான் இருந்தார். கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு கூட நாங்கள் இருவரும் ரிசார்ட் சென்று இருந்தோம். அதன் பிறகு, நாம் பழக வேண்டாம், அடிக்கடி வீட்டில் சண்டை வருகிறது என்றார். இப்போது என்னை திருநங்கை என்ற காரணத்தை காட்டி திருமணம் செய்ய மறுக்கிறார்" என்றார்.

Tags:    

Similar News