சினிமா செய்திகள்
null

இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறை.. மகேஷ் பாபு படத்துக்கு ரூ.50 கோடியில் காசி நகரை உருவாக்கும் ராஜமௌலி

Published On 2025-06-19 03:30 IST   |   Update On 2025-06-19 05:42:00 IST
  • ராஜமௌலி பழைய பாணி செட் அமைக்கும் முறைக்கு திரும்பி உள்ளார்.
  • இதில் நடிகை பிரியங்கா சோப்ராவும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பான் இந்தியா இயக்குநர் ராஜமௌலி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிண் 29வது படத்தை இயக்கி வருகிறார்.

இதில் நடிகை பிரியங்கா சோப்ராவும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்திற்காக ரூ.50 கோடி செலவில் பிரம்மாண்டமான காசி நகர செட் ஒன்றை ஐதராபாத்தில் உருவாகி வருகிறது.

இந்திய சினிமா வரலாற்றில் ரூ.50 கோடி செலவில் தனி ஒரு செட் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

VFX மற்றும் CGI தொழில்நுட்பங்கள் முன்னேறி வரும் நிலையில், நம்பகத்தன்மைக்காகவும், படப்பிடிப்புக்காக அடிக்கடி பயணங்களைத் தவிர்க்கவும் ராஜமௌலி இந்த பழைய பாணி செட் அமைக்கும் முறைக்குத் திரும்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags:    

Similar News