இலங்கை தீவில் சொகுசு மாளிகை கட்டும் பிரபல நடிகை
- இலங்கை அருகில் 4 ஏக்கர் பரப்பளவிலான ஒரு தனி தீவை 2012-ம் ஆண்டில் அவர் வாங்கினார்.
- இந்த மாளிகையில் தான் தனது திருமணம் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறாராம்.
சினிமா நடிகர்களும், நடிகைகளும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நிலையில், அதைக்கொண்டு சொகுசு கார்கள், பங்களா, வெளிநாடு பயணம் என ஆடம்பரத்துக்காக செலவழிப்பார்கள். பலரும் அதை ரியல் எஸ்டேட்டிலும், தொழிலும் முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால் சம்பாதித்த காசில், சொந்த நாட்டில் ஒரு தனி தீவையே வாங்கி, வியக்க வைத்தார் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், இலங்கையை சேர்ந்தவர் ஆவார். பல வருடங்களாக சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை கொண்டு (ரூ.6 கோடி வரை), இலங்கை அருகில் 4 ஏக்கர் பரப்பளவிலான ஒரு தனி தீவை 2012-ம் ஆண்டில் அவர் வாங்கினார். அந்த தீவில் ஒரு சொகுசு மாளிகை கட்ட நடிகை திட்டமிட்டு இருக்கிறாராம்.
இந்த மாளிகையில் தான் தனது திருமணம் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறாராம், விரைவில் 40 வயதை எட்டவுள்ள ஜாக்குலின் பெர்னாண்டஸ்.