ஓடிடி ரிலீஸ் வரைக்கும் வெயிட் பண்ணாதீங்க! DNA படத்த கண்டிப்பா தியேட்டர்ல பாருங்க
- அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் டிஎன்ஏ.
- படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.
அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.
இவர் கடைசியாக நடித்து வெளியான நிறங்கள் மூன்று திரைப்படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் டிஎன்ஏ திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்தின் முன்பதிவுகள் மற்றும் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இப்படத்தை ஓடிடி-யில் பார்த்து கொள்ளலாம் என நினைத்தால் மக்கள் ஒரு நல்ல படத்தை திரையரங்கில் பார்க்க தவற விட்டுடார்கள் என வருத்தபடுவர் என நெட்டிசன்கள் அவர்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.