விஜய்-காக களத்தில் இறங்கும் தனுஷ்?.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் காத்திருக்கும் சம்பவம்
- பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி நடித்துள்ளனர்.
- 27ம் தேதி மலேசியாவில் உள்ள புகித் ஜலீல் அரங்கத்தில் நடைபெறவுள்ள அறிவிக்கப்பட்டது.
விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.
அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் உள்ள புகித் ஜலீல் அரங்கத்தில் நடைபெறவுள்ள அறிவிக்கப்பட்டது.
பிரமாண்டமாக நடைபெற உள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இதன்முன் விஜயை வைத்து படம் இயக்கிய இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ ஆகியோரும் கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனவே விழாவில் விஜய் ஒருபுறம் குட்டி கதை சொல்ல தனுஷ் மறுபுறம் ரஜினி ஸ்டைலில் பேச வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிரார்ப்பிக்கின்றனர்.
மறுபுறம் சுதா கோங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.