சினிமா செய்திகள்

பஹல்காம் பயங்கரவாதிகளுடன் ரசிகர்களை ஒப்பிட்டு சர்ச்சை.. பாடகர் சோனு நிகாம் மீது கர்நாடக போலீஸ் FIR

Published On 2025-05-03 19:52 IST   |   Update On 2025-05-03 19:52:00 IST
  • அப்போது ரசிகர்கள் அவரிடம் கன்னட பாடலை பாடும்படி கறாராக கேட்டனர்.
  • இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் சோனு நிகாம் விளக்கம் அளித்தார்.

கர்நாடகாவில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் பஹல்காம் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு சர்ச்சையாக பேசியதாக பாடகர் சோனு நிகாம் மீது புகார் எழுந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 27-ம் தேதி பெங்களூரில் பாடகர் சோனு நிகாமின் இசை கச்சேரி நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் அவரிடம் கன்னட பாடலை பாடும்படி கறாராக கேட்டனர்.

இதனால் கோபமடைந்த பாடகர் சோனு நிகாம், இதனால் தான் பஹல்காம் தாக்குதல் நடந்தது என ரசிகர்களின் மனநிலையை பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயனகிராவதிகளுடன் ஒப்பிட்டு பேசினார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில் அவர் மீது கன்னட அமைப்புகள் பல புகார் தெரிவித்தன. இந்நிலையில் புகாரின் அடிப்படையில் அவர் மீது கர்நாடக போலீஸ் இன்று எப்ஐஆர் பதிந்துள்ளது.

இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்த சோனு நிகாம்,  தான் கன்னட மக்களை நேசிப்பதாகவும், கன்னடத்தில் சிறந்த பாடல்களை பாடியிருப்பதாகவும் கூறினார். 

Tags:    

Similar News