கதாநாயகன் இஷாக் உசைனி ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்து வருகிறார். இவரது தந்தையும், தம்பியும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.
இதனால், தனது தந்தையையும், அண்ணனையும் பழி வாங்க நினைக்கிறார். ஆனால், தம்பி இஷாக் உசைனி சிறு வயதில் காணாமல் போன தனது அண்ணனை காண ஏங்கிக் கொண்டிருக்கிறார். என்றைக்காவது ஒரு நாள் சந்தித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
வெளிநாட்டில் இருந்து வரும் தம்பி உசைனும், அண்ணனும் ஒரே பெண்ணை காதலிக்கின்றனர். இதற்கிடையே, எம்.பியாகும் முனைப்பில் இருவரும் போட்டியிடுகின்றனர்.
தம்பியை கொலை செய்ய துடிக்கும் அண்ணன் இஷாக் உசைனியும், அண்ணன் மீது அதிக பாசம் கொண்ட தம்பியும் அரசியல் மற்றும் காதலால் சகோதரர்கள் என்று தெரியாமலேயே எதிரெதிரே நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இந்தநிலையில், அண்ணனும்- தம்பியும் சந்தித்தார்களா? அரசியல் மற்றும் காதலில் யார் ஜெயித்தார்? என்பது மீதிக்கதை..
நடிகர்கள்
இஷாக் உசைனி தொழிலதிபர் மற்றம் அரசியல்வாதியாகவும், கல்லூரி மாணவராகவும் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இரண்டு வேடங்களுக்கும் இடையே இருக்கு வேற்றுமையை வெளிப்படுத்த மெனக்கெட்டிருக்கிறார். தில்சானா மற்றும்
ஹேமா கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். வில்லன் உள்பட அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்துள்ளனர்.
இயக்கம்
நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இஷாக் உசைனி அரசியல் ஆக்ஷன் மாஸ் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
இசை
இசையமைப்பாளர் சதாசிவ ஜெயராமனின் இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர்கள் தயாள் ஓஷோ மற்றும் தேவராஜ், படத்தொகுப்பாளர் நவீன்குமார் ஆகியோர் படத்திற்கு பலம் சேர்க்க முயன்றுள்ளனர்.