சினிமா செய்திகள்
பெண் குழந்தைக்கு தந்தையான பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ்.. 4-ஆம் ஆண்டு திருமண நாளில் கிடைத்த வரம்
- எங்கள் நான்காம் ஆண்டு திருமண விழாவில் கடவுள் எங்களுக்கு அளித்த ஒரு பெரிய ஆசீர்வாதம்.
- ராஜ்குமார் ராவ் கடைசியாக 'மாலிக்' மற்றும் 'பூல் சுக் மாஃப்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ்வின் மனைவி, நடிகை பத்ரா லேகாவுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
தம்பதியினர் தங்கள் 4 ஆம் திருமண நாளில் பெற்றோர் ஆகியுள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை தம்பதியினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.
அவர்களின் பதிவில்," இது எங்கள் நான்காம் ஆண்டு திருமண விழாவில் கடவுள் எங்களுக்கு அளித்த ஒரு பெரிய ஆசீர்வாதம். எங்கள் இதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளன" என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2021 இல் ராஜ்குமார் ராவ் மற்றும் பத்ரா லேகா திருமணம் செய்து கொண்டனர்.
ராஜ்குமார் ராவ் கடைசியாக 'மாலிக்' மற்றும் 'பூல் சுக் மாஃப்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.