சினிமா செய்திகள்

தங்கை மீது சுமத்தப்பட்ட பழி : உண்மையை வெளிக்கொண்டு வந்த பிரபல நடிகை

Published On 2025-06-08 17:07 IST   |   Update On 2025-06-08 17:07:00 IST
  • மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் அஹானா கிருஷ்ணன்.
  • இவரது தங்கை தியா கிருஷ்ணன் இன்ஸ்டா பிரபலம் ஆவார்.

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் அஹானா கிருஷ்ணன். இவர் பல பிரபல மலையாள திரைப்படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவரது தங்கை தியா கிருஷ்ணன் இன்ஸ்டா பிரபலம் ஆவார். அவர் ஓ பை ஓஸி {Oh By Ozy} என்ற கவரிங் நகைக்கடை வைத்துள்ளார். இவருடைய கடையில் வேலைப்பார்த்த மூன்று பெண்கள் தியாவிற்கு தெரியாமல் பெரிய பண திருட்டில் ஈடுப்பட்டுள்ளனர்.

 

திருட்டில் ஈடுப்பட்ட மூன்று பெண்களும் கடையில் உள்ள பணம் செலுத்தும் க்யு ஆர் கோடை அவர்களது சொந்த வங்கியின் க்யூ ஆர் கோட்-உடன் மாற்றி வைத்து இந்த திருட்டை மேற்கொண்டுள்ளனர். இதனை ஒப்புக்கொள்ளும் விதமாக அஹானா அந்த மூன்று பெண்களை வைத்து வாக்குமூலம் வாங்கி அதனை யூடியூபில் வெளியிட்டுள்ளார்.

 

அதில் அவர்கள் முதலில் தன் குற்றத்தை ஒப்புக் கொள்கின்றனர். திருடிய பணத்தை குறிப்பிட்ட காலத்தில் கொடுப்பதாக வாக்கும் கொடுக்கின்றனர். மேலும் சில நாட்களுக்கு பிறகு அஹானா குடும்பத்தை எதிர்த்து பொய் வழக்கை இந்த மூன்று பெண்களும் சுமத்துகின்றனர். உண்மை எது என உறக்க சொல்லதான் இந்த வீடியோ எடுத்து அஹானா வெளியிட்டுள்ளார். இதனால் தன் குடும்பத்தின் மீது சுமத்தப்பட்ட கலங்கத்தை துடைக்க இவ்வாறு அவர் செய்துள்ளார்.

Full View

 

Tags:    

Similar News