சினிமா செய்திகள்

Bigg Boss Season 9: வைல்ட் கார்டு மூலம் என்ட்ரியான பிரஜன் - திவ்யா கணேஷ்

Published On 2025-10-28 17:35 IST   |   Update On 2025-10-28 17:35:00 IST
  • முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தியும் 2 ஆம் வாரம் அப்சரா சிஜேவும் வெளியேற்றப்பட்டனர்.
  • இந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டார்.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பாக போட்டியாளர்கள் பிக் பாஸ் ஹவுஸ், லக்சரி ஹவுஸ் என இரண்டு குழுக்களாக பிரித்து விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் ஹவுஸ் எந்தவித சலுகைகள் இல்லாமலும் லக்சரியில் சமையல் உட்பட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.

முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தியும் 2 ஆம் வாரம் அப்சரா சிஜேவும் வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் பிரஜன் மற்றும் நடிகை திவ்யா கணேஷ் உள்ளே நுழையவுள்ளார்கள் என விஜய் டிவி வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. 

Tags:    

Similar News