சினிமா செய்திகள்

விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை நமிதா!

Published On 2024-05-27 13:09 GMT   |   Update On 2024-05-27 13:09 GMT
  • தமிழ் திரையுலக ரசிகர்களை ‘ஹாய் மச்சான்’ என அழைத்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நமீதா.
  • எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர்.

தமிழ் திரையுலக ரசிகர்களை 'ஹாய் மச்சான்' என அழைத்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நமீதா.நடிகை நமிதா, கடந்த 2004 இல் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர்.

விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித் உள்பட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நமீதாவுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை நமீதா திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.

குடும்பத்தை கவனித்துக் கொண்டு சினிமா நடிப்புக்கு இடைவெளிவிட்ட நிலையில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நமீதாவும் அவரது கணவரும் பிரிய இருப்பதாக தகவல்கள் பரவியது. இதுபற்றி நமீதா கூறியதாவது:-

நானும் என் கணவரும் பிரிய இருப்பதாக வதந்தி பரவி இருப்பது சில தினங்களுக்கு முன்புதான் எனக்கு தெரியும். இதையடுத்து நான் என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தேன்.

அப்படி இருந்தும் வதந்தி நிற்பது போல் தெரியவில்லை. சினிமாவில் ஏராளமான வதந்தியை பார்த்து விட்டதால் இதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. வதந்திகளை பார்த்து கணவரும் நானும் சிரித்து கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News