சினிமா செய்திகள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் நடிகர் கார்த்தி!
- நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார்.
- இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.
'மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம் வருகிற 12ஆம் தேதி திரைக்கு வருகிறது
இந்நிலையில், திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடிகர் கார்த்தி சாமி தரிசனம் செய்தார்.