null
உருவாகிறது புதிய காற்றழுத்தம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - எப்போ தெரியுமா?
- டிட்வா புயலுக்கு பிறகு தமிழ்நாட்டில் போதிய மழை பெய்யவில்லை.
- ஜனவரி தொடக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இயல்பை ஒட்டிய மழை நமக்கு கிடைத்துள்ளது. ஆப்கானில் அதே சமயம் டிட்வா புயலுக்கு பிறகு தமிழ்நாட்டில் போதிய மழை பெய்யவில்லை.
ஜனவரி தொடக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், ஜனவரி மாதம் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளது என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் ஜன.8ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதனால் ஜனவரி 09 - 12 வரை தமிழகத்தில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.
குறிப்பாக ஜனவரி 10, 11 தேதிகளில் கடலோர, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிககனமழைக்கு வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார்.