சினிமா செய்திகள்
null

திரைத்துறையில் 33 ஆண்டுகள் நிறைவு - அஜித்குமாரை வாழ்த்திய ஆதிக் ரவிச்சந்திரன்

Published On 2025-08-03 13:43 IST   |   Update On 2025-08-03 13:44:00 IST
  • அஜித்குமார் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
  • #33YearsOfAjithKumar என்ற ஹேஸ்டேக்கை அஜித் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

நடிகர் அஜித்குமார் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அதை கொண்டாடும் விதமாக #33YearsOfAjithKumar என்ற ஹேஸ்டேக்கை அஜித் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், அஜித்குமாரின் 33 ஆண்டுகள் திரைத்துறையை பயணத்தை வாழ்த்தி குட் பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "33 வருட அற்புதமான பயணம். உங்கள் ஈடு இணையற்ற கடின உழைப்பு ஒரு அரிய ரத்தினம். உங்களை நேசிக்கிறேன் சார் #33YearsOfAJITHISM" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News