சினிமா செய்திகள்
லோகேஷ் கனகராஜ் கதையை நிராகரித்த பிரபல நடிகர்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் கதையை பிரபல நடிகர் நிராகரித்ததாக கூறப்படுகிறது.
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நடிப்பில் இன்று வெளியாகியுள்ள விக்ரம் திரைப்ப்டத்தை இயக்கி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் - பிரபாஸ்
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸிடம் கதை கூறியதாகவும் இதனை அவர் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் கதை சாதரணமாக இருப்பதாக கூறி இதனை நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.