சினிமா செய்திகள்
லோகேஷ் கனகராஜ் - கமல்

ரசிகர்களுடன் படம் பார்த்த லோகேஷ் கனகராஜ்

Published On 2022-06-03 11:05 IST   |   Update On 2022-06-03 11:11:00 IST
கமல் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படத்தை ரசிகர்களுடன் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழு பார்த்து ரசித்தனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று (03.06.2022) திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 


திரையரங்கில் விக்ரம் படக்குழு

இந்நிலையில் திரையரங்குகளில் இன்று வெளியாகி இருக்கும் விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் ரசிகர்களுடன் அமர்ந்து விக்ரம் படத்தை பார்த்து ரசித்தனர். 


திரையரங்கில் விக்ரம் படக்குழு

திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினரை ரசிகர்கள் கரகோஷத்துடன் வரவேற்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News