சினிமா செய்திகள்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்

குலதெய்வ கோவிலில் நயன்தாரா-விக்னேஷ் சிவன்

Update: 2022-05-23 10:35 GMT
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் லால்குடி அருகே குலதெய்வ கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர்.
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். இவர்கள் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
 ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அளித்த பேட்டி ஒன்றில், தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார்.


நயன்தாரா - விக்னேஷ் சிவன்

இந்நிலையில் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பல்வேறு கோவில்களுக்கு ஒன்றாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று அவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதற்காக நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு காலை 11.40 மணிக்கு வந்தனர். அப்போது விமான நிலையத்தில் இருந்த ஊழியர்கள் உள்பட பலரும் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் லால்குடி அருகே உள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலில் வழிபாடு நடத்தினர். 
Tags:    

Similar News