சினிமா செய்திகள்
சன்னி லியோன்

மூன்று நாட்களுக்குள் பாடலை நீக்கவில்லை என்றால்...சன்னி லியோனுக்கு மபி மந்திரி எச்சரிக்கை

Published On 2021-12-26 21:28 IST   |   Update On 2021-12-26 21:28:00 IST
சன்னி லியோன் நடனம் ஆடிய பாடல் இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மும்பை:

கிருஷ்ணர் - ராதையின் காதலை பேசும் ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ பாடலுக்கு நடிகை சன்னி லியோன் நடனமாடிய வீடியோ ஒன்றை சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த நடனம் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஆபாசமாக அமைந்துள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில் சன்னி லியோன் அந்த பாடலை 3 நாட்களுக்குள் நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய பிரதேச மந்திரி நரோட்டம் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.



இதையடுத்து அந்த பாடலை வெளியிட்டுள்ள சரிகம நிறுவனம், மூன்று நாட்களுக்குள் பாடலின் வரிகளும், பெயரும் மாற்றப்படும் என உறுதி அளித்துள்ளது.

Similar News